கவனக்குறைவும் குழந்தையின் சாவும்
சமீபத்தில் சென்னையில் ஒரு பிரபல பள்ளிகூடத்தில் வாழைபழம் சாப்பிட்ட குழந்தை ஓன்று மூச்சு திணறி சற்று நேரத்தில் இறந்து விட்டது. இது பத்திரிகை செய்தி ஆகி விட்டதால் சென்னை நகரமே பரபரத்தது.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது குழந்தைகளை பொறுத்த வரை சகஜம் தான். தாய் மார்களின் சரியான பாதுகாபின்மையே இதற்கு முழு முதற் காரணமாகும். உணவு சாப்பிடும்போது எப்படி கவனமாக கடித்து விழுங்கவேண்டும் என்ற அடிப்படை திறன்களை மிகவும் பொறுமையுடன் குழந்தைகளுக்கு கற்று கொடுப்பது தாய்மார்களின் மிக முக்கிய கடமையாகும். இதை சாதாரணமாக கருதி, இதில் அதிக கவனம் செலுத்த தவறினால் இது போன்ற உயிர் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
இது போன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது எப்படி என்பது பற்றி பொதுமக்களுக்கு, குறிப்பாக தாய்மார்களுக்கு அறிவுரை வழங்குவதற்கு ரிலையன்சின் 'BIG FM RADIO' வில் ஒலிபரப்ப, ப்ரைமெக்ஸ் லேப் மற்றும் இஸ்கான்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்க சென்னையின் பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா அவர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. இந்த அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர்.அபிபுல்லா அவர்களின் வானொலி உரை நேயர்களின் வேண்டுதலுக்கு இணங்க இந்த இணையத்தளம் வாயிலாக மீண்டும் பதிவாகிறது.
![]() |
Prmex labs and scans executive introduces DR.HABIBULLAH |
ப்ரைமெக்ஸ் நிறுவன அதிகாரி
டாக்டர்.அபிபுல்லா அவர்களை
அறிமுகம் செய்கிறார்.