Tuesday, 3 January, 2012

BIG FM RADIO TALK TAMIL - dr.habibullah

கவனக்குறைவும் குழந்தையின் சாவும்

சமீபத்தில் சென்னையில் ஒரு பிரபல பள்ளிகூடத்தில் வாழைபழம் சாப்பிட்ட குழந்தை ஓன்று மூச்சு திணறி சற்று நேரத்தில் இறந்து விட்டது. இது பத்திரிகை செய்தி ஆகி விட்டதால் சென்னை நகரமே பரபரத்தது.

இது போன்ற சம்பவங்கள்  நிகழ்வது குழந்தைகளை பொறுத்த வரை சகஜம் தான். தாய் மார்களின்  சரியான பாதுகாபின்மையே இதற்கு முழு முதற் காரணமாகும். உணவு சாப்பிடும்போது எப்படி கவனமாக கடித்து விழுங்கவேண்டும் என்ற அடிப்படை திறன்களை மிகவும் பொறுமையுடன் குழந்தைகளுக்கு  கற்று கொடுப்பது தாய்மார்களின் மிக முக்கிய கடமையாகும். இதை சாதாரணமாக கருதி, இதில் அதிக கவனம் செலுத்த தவறினால் இது போன்ற  உயிர் இழப்புகளை சந்திக்க நேரிடும். இது போன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது  எப்படி என்பது பற்றி பொதுமக்களுக்கு, குறிப்பாக தாய்மார்களுக்கு  அறிவுரை   வழங்குவதற்கு ரிலையன்சின் 'BIG FM RADIO'  வில் ஒலிபரப்ப, ப்ரைமெக்ஸ் லேப் மற்றும் இஸ்கான்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்க சென்னையின் பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா அவர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. இந்த அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர்.அபிபுல்லா அவர்களின் வானொலி உரை நேயர்களின் வேண்டுதலுக்கு இணங்க இந்த இணையத்தளம் வாயிலாக மீண்டும் பதிவாகிறது.

Prmex labs and scans executive
introduces
DR.HABIBULLAH

ப்ரைமெக்ஸ் நிறுவன அதிகாரி
டாக்டர்.அபிபுல்லா அவர்களை
அறிமுகம் செய்கிறார்.

  
BIG FM RADIO
Mr.Muthu interviewing
DR.HABIBULLAHபிரபல குழந்தை மருத்துவ நிபுணர்
டாக்டர். அபிபுல்லா
தமிழில் துவக்க உரை
நிகழ்த்துகிறார்.
குழந்தைகளை எவ்வாறு கவனமாக
பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி
தெளிவாக விளக்கம் தருகிறார்
பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணர்
டாக்டர்.அபிபுல்லாமுதலுதவி முறைகளை பற்றியும்
அதை எவ்வாறு செய்வது என்பது பற்றியும்
எளிய தமிழில் விளக்குகிறார்
குழந்தை மருத்துவ நிபுணர்
டாக்டர்.அபிபுல்லா


Saturday, 29 October, 2011

ஆரோக்கியம் - கேள்வி-பதில்தமிழ் ஆரோக்கிய இதழில் டாக்டர்.அபிபுல்லா

அவர்களின் ஒரு அரிய மருத்துவ பேட்டி

குழந்தை ஆரோக்கியம்குழந்தை வளர்ப்பு பற்றி மிக அரிய தகவல்களை தருகிறார் டாக்டர்.

அபிபுல்லா அவர்கள்

கேள்வி-பதில் டாக்டர்.அபிபுல்லாகுழந்தை வளர்ப்பு பற்றி மருத்துவ நிபுணர்

டாக்டர்.அபிபுல்லா அவர்களின் பேட்டி

டாக்டர்.அபிபுல்லா பேட்டி - ராணி இதழில்ராணி தமிழ் இதழில் வெளிவந்த டாக்டர்.அபிபுல்லா அவர்களின்

மருத்துவ பேட்டி

டாக்டர்.அபிபுல்லா பேட்டி - தேவியில்

தேவி தமிழ் வார இதழில் வெளிவந்த குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லாவின் மருத்துவ பேட்டி.

Monday, 25 July, 2011
கேள்வி: நவீன கால கட்டத்தில் காதல் திருமணம் செய்து கொள்வது தவறா? தன் மனம் இசைந்த மணமகனுடன் வாழ்க்கை நடத்துவதில் என்ன தவறு? இதற்காக மருமகனையே கொலை செய்வது என்ன நியாயம். குழந்தைகளை பெற்றோர்களின் கோர பிடியில் இருந்து காப்பது எப்படி?

பதில்: நீங்கள் அனுப்பிய பத்திரிகை செய்தியை நானும் பார்த்தேன். சற்று அதிர்ச்சியும் அடைந்தேன். கலீல் ஜிப்ரான் சொன்ன ஒரு வாசகம் எனக்கு நினைவுக்கு வந்தது. "உங்கள் எண்ணங்களை உங்கள் குழந்தைகள் மீது திணிக்காதீர்கள்-ஏனென்றால் அவர்களுக்கான எண்ணங்களை தயார் செய்யும் பக்குவம் அவர்களுக்கு உண்டு. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், படித்த பக்குவம் நிரம்பிய, வயது வந்த ஆண்-பெண்களின் மன இயல்புகளை, அவர்களின் அந்தரங்க உண்மைகளை மனம் விட்டு பேசி நல்ல முடிவுகளை மேற்கொள்வது நல்ல தாய்-தந்தையரின் பண்பாகும். தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைத்து கொடுப்பது பெற்றோர்களின் கடமை. தங்கள் குழந்தைகளின் வாழ்வில் தடங்கல்களையும், முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்துவோர் நல்ல பெற்றோர்களாக இருக்க முடியாது. கண்களை இழந்தபின் சித்திரம் வாங்க இயலாது. குழந்தைகளை இழந்தபின் பெற்றோர்கள் சாதிக்க எண்ணுவது என்ன என்பதே நம் கேள்வி.

மாணவர்களும் நல்லொழுக்கமும்
கேள்வி: இக்கால மாணவ மாணவிகள் கெட்டு போவதற்கு எது காரணம் என்று எண்ணுகிறீர்கள். வெளிநாடுகளில் காணப்படும் இந்த சீரழிவு கலாசாரம் நம் இளம் தலைமுறையையும் பற்றி கொள்வதன் ரகசியம் என்ன?

பதில்: இப்போதுள்ள தலைமுறைக்கும், பழைய தலைமுறைக்கும் அதிக இடைவெளி ஏற்பட்டுவிட்டது. ஹை-டெக் சாதனங்களின் துணையுடன் மேல் நாட்டு நாகரீகம் அல்லது கலாச்சாரம் நமது வீட்டு வரவேற்பறைகளிலும்,படுக்கை அறைகளிலும் எட்டி பார்க்க தொடங்கிவிட்டது. சேட் வசதிகளும்,ஐ போன் மற்றும் முழு அளவிலான இணையதள தகவல் பரிமாற்றங்களும் இளைனர்களை கட்டி போட்டுவிட்டன. பேஸ்-புக் ஒரு படி மேலே போய் புதிய நண்பர்களையும் அவர்களின் வாலிப சேட்டைகளையும் விலாவாரியாக அலசும் அரட்டை-அரங்கமாக மாறிவிட்டது. தனது குழந்தைகள் தனது ஒய்வு நேரத்தை எப்படி செலவு செய்கிறார்கள் என்பதை பெற்றோர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. காதல் பரிவர்த்தனைகளிலும், உல்லாச கேளிக்கைகளிலும் அதிக ஈடுபாடு கொள்வது இளைனர்களை பொறுத்த வரை ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. நண்பர்கள் என்ற போர்வையில் ஆண்- பெண் நெருங்கி பழகும் தன்மை நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இளைனர்களை தட்டி கேட்கும் நிலையில் தாய்- தந்தையரும் இல்லை. இந்த வரம்பு மீறல்களால் பாதிக்க படுவது பெண் குழந்தைகள் மட்டுமே. முறையான செக்ஸ் கல்வி பற்றி குழந்தைகளுக்கு இளமையிலேயே, அறிவுறுத்துவதும், பாதிக்கபட்டால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி சிறந்த மருத்துவர்களை கொண்டு போதிப்பதும், நல்ல ஒழுக்க சிந்தனைகளை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதன் மூலமும் இது போன்ற அவலங்களை தடுத்து நிறுத்த முடியும்.

Sunday, 24 July, 2011

பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லாவின் கேள்வி-பதில்கள்.


கேள்வி :குழந்தையை வளர்த்து சீர் படுத்த வேண்டிய தாய்-தந்தையரே தவறான வழியில் நடந்தால் அது குழந்தைகளின் மனதை பாதிக்குமா?ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் யார் கைகளில் இருக்கிறது? தாயின் நடத்தையிலா அல்லது தந்தையின் நடத்தையிலா?

பதில்: ஒரு குழந்தை உருவாவதில் இருந்து வளர்ந்து வாலிபன் ஆகும் வரை தாயின் அரவணைபிலேயே வாழ விரும்புகிறது.தாய் காட்டும் அன்பும், பாசமும், பரிவும் குழந்தையின் வாழ்வில் தாய் பால் உடல் வளர்ச்சிக்கு உதவுவது போல், இவை மன வளர்ச்சிக்கு அடிப்படை நல்மருந்தாய் அமைகின்றன. தாயின் நன்நடத்தையே குழந்தைக்கு தாயின் பால் மதிப்பையும்,மரியாதையையும் பெற்று தர உதவி புரிகின்றன. தவறு செய்யும் தந்தையை சமுதாயம் குறை கூறினால் கண்டு கொள்ளாத மகன் தன் தாயை பற்றி எவரும் குறை கூறினால் பொங்கி எழுகிறான். காரணம் நமது சமுதாயம் தாயிக்கு மிகுந்த கௌரவத்தை வாரி வழங்குகிறது. தாயை தெய்வத்துக்கு இணையாக நமது சமூகம் கருதுகிறது. தவறு செய்யாதவர் தன் தாய் என்றே எந்த குழந்தையும் எண்ணுகிறது. கற்பு நெறியை தன் தாயிடம் மிகவும் அதிகமாகவே எதிர்பார்க்கிறது. அது தவறும் போது எந்த மகனாலும் இதை ஜீரணிக்க முடிவதில்லை. மகன் தவறு செய்தால் தாய் தடுக்கலாம் - தாயே தவறு செய்தால் யார் தடுப்பது. சில சூழ்நிலைகளில் குழந்தைகளே இதை சரி செய்கிறார்கள். தவறு செய்தவர் தாயாக இருந்தாலும் சரியே.ஏமாற்றம் தரும் காதல்
கேள்வி: அழகான பெண்ணை பார்த்தால் காதல் வருமா அல்லது அந்தஸ்து, பணம்,புகழ், பதவி உள்ள பெண்ணை பார்த்தால் காதல் வருமா? காதலித்த நபரை கைவிடுவதில் கை தேர்ந்தவர் யார்? ஆணா-அல்லது பெண்ணா?

பதில்: காதலிப்பதில் ஒரு முக்கிய நோக்கம் இருக்கிறது. காதலிப்பது என்பது இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு சமூக அந்தஸ்தாக மாறிவிட்டது. அதிக ஆண் அல்லது பெண் நண்பர்களை பெற்றவர்களே கல்லூரிகளில் 'ஹீரோ' வாக பவனி வருகிறார்கள். இந்த அந்தஸ்தை பெறுவதற்கு கல்லூரிகளில் கடும்போட்டியும் நிலவுகிறது. காதலிப்பவர் இடையேயும் போட்டியும்,பொறாமையும் நிகழ்கிறது. நீண்ட நாள் காதலர்கள் பிரிவதும், புதியவர்கள் அந்த இடத்தை நிரப்புவதும் காதலின் தூய்மையை கெடுத்துவிட்டது. 'காசிருந்தால் வாங்கலாம் - ஐயோ பாவம்', என்ற கண்ணதாசனின் கவிதைக்கு ஏற்ப காதல், தன் கண்ணியத்தை இழந்து தலைகுனிந்து நிற்கிறது. தூய்மை இல்லாத காதல் பெரும் தோல்விகளையே இப்போது சந்தித்து வருகிறது. சிலர் நீங்கள் குறிப்பிடுவது போல் அழகுக்காக காதலிக்கிறார்கள், பலர் பணத்திற்காகவும் காதலிக்கிறார்கள். வெகு சிலரே காதலுக்காக வாழ்கிறார்கள், அது கிடைக்காதபோது உயிரை இழக்கவும் தங்களை தயார் படுத்திகொள்கிறார்கள். தூய்மையான காதலர்கள், காதலிப்பவர்களை எக்காலத்திலும் கை விட மாட்டார்கள். வேறு துணையை நாடி ஓடமாட்டார்கள். வேறு வாழ்கை துணையை நாடுபவர்களை சட்டத்தாலோ அல்லது போலீசாலோ தடுத்தி நிறுத்த முடியாது. சட்டத்தை காட்டி பிடிக்காதவரை காதல் செய்ய வைக்கவோ அல்லது கட்டாய திருமணம் செய்து கொள்ள வைக்கவோ இயலாது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.